கேரள விமான விபத்து தொடர்பாக பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
துபாயிலிருந்து கேரளா வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது. இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். முதற்கட்ட தகவல் அறிக்கையில் விமானத்தின் முன்சக்கரத்தில் பழுது ஏற்பட்டதால் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். “ கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தானது அதிக வலியைத் தந்துள்ளது. எனது எண்ணமெல்லாம் விபத்தில் தனது நெருக்கமானவர்களை இழந்து தவிக்கும் நபர்களின் மீதுதான் இருக்கிறது. அங்குள்ள நிலைமைக் குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமாவர்கள் . களத்தில் நிற்கும் அதிகாரிகள் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள் ” என்று குறிப்பிட்டுள்ளார்.