குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடியை போல் வேடமிட்டு வந்த சிறுவனை, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த மோடி மேடைக்கு அழைத்து உரையாடினார்.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் பாஜக சார்பில் கட்சி தலைவர்கள் பலர் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று நவ்சாரி பகுதியில் பிரதமர் மோடி குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது மோடியை போலவே வேடமிட்ட சிறுவன் அங்கு வருகை தந்திருந்தான்.
மோடியை போலவே உடை, தலைப்பாகை மற்றும் தாடி வைத்து வேடமிட்டிருந்த அந்த சிறுவன் பலரின் கவனத்தையும் பெற்றான். அந்த சிறுவனைக் கண்ட பிரதர் மோடி மேடைக்கு அழைத்து அவனுடன் உரையாடினார். பின்பு அவனை கூட்டத்தில் இருக்கும் மக்களை பார்த்து கையசைக்க வைத்தார். பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த இந்த சுவாரசியமான நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிகழ்வை மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.