"மோடி டீ விற்று நான் பார்த்தது இல்லை" பிரவீன் தொகாடியா

"மோடி டீ விற்று நான் பார்த்தது இல்லை" பிரவீன் தொகாடியா
"மோடி டீ விற்று நான் பார்த்தது இல்லை" பிரவீன் தொகாடியா
Published on

பிரதமர் நரேந்திர மோடி டீ விற்று தான் ஒருபோதும் பார்த்தது இல்லை என பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் செயல்தலைவர் பிரவீன் தொகாடியா இதுகுறித்து கூறும்போது, கடந்த 43 ஆண்டுகளாக பிரதமர் மோடியுடன் தான் நட்பில் இருந்ததாக கூறியுள்ளார். ஆனால் ஒருபோதும் மோடி டீ விற்றதை தான் கண்டதில்லை எனவும், பொதுமக்கள் மத்தியில் அனுதாபத்தை பெறத்தான் பிரதமர் ‘டீ விற்றேன்’ என பேசுவதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசும்போது, “இன்னும் 5 ஆண்டுகளில் ராமர் கோயில் கட்டப்படாது என்பதை பிரதமர் மோடியின் அறிக்கை தெளிவாக காட்டுகிறது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை 125 கோடி இந்திய மக்களை இருட்டில் வைத்துள்ளது. ஆனால் இந்திய நாட்டில் உள்ள இந்து மக்கள் தற்போது விழித்துக் கொண்டுள்ளனர். பிப்ரவரி 9-ஆம் தேதி இந்துகளுக்காக புதிய கட்சி அறிவிக்கப்படும். அக்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த நாளே ராமர் கோயில் கட்டுவதற்காக பணிகள் தொடங்கிவிடும்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய இரண்டின் உயிர்நாடி பிரச்னையாக ராமர் கோயில் இருப்பதால், பிரதமர் மோடி 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர் ராமர் கோயில் கட்ட முன்வரமாட்டார். ஒருவேளை இந்த பிரச்னைகள் எல்லாம் முடிந்துபோய் விட்டால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய இரண்டுமே ஒன்றும் இல்லாமல் சரிந்து போய்விடும். அதனாலேயே இந்த பிரச்னையை உயிரோட்டமாக வைத்துக்கொண்டு ராமர் கோயிலை கட்ட பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் முன்வருவதில்லை என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com