பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறும் இந்திய- ஆசியான் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று புறப்பட்டுச் சென்றார். தமது மூன்று நாள் பயணத்தின் போது அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்.
மனிலாவில் நடைபெறவுள்ள 15வது ஆசியான்-இந்தியா மாநாட்டில் பங்கேற்கும் மோடி பின்னர் நவம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள 12வது கிழக்காசிய மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார். ஆசியான் வர்த்தக மற்றும் முதலீடு மாநாட்டிலும் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே-வுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். கிழக்காசிய மாநாட்டில் கலந்துகொள்ளும் சிலத் தலைவர்களையும் பிரதமர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள இந்தியர்களை சந்திக்க ஆர்வமாக இருப்பதாக பிரதமர் கூறியுள்ளார்