ராகுலின் சாதி குறித்த விமர்சனம் | அனுராக் தாக்கூர் பேச்சுக்கு எதிராக அமளி.. அவை ஒத்திவைப்பு!

ராகுல் காந்தியின் சாதியை கேட்டு விமர்சித்த அனுராக் தாக்கூர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அனுராக் தாக்கூர், ராகுல் காந்தி
அனுராக் தாக்கூர், ராகுல் காந்திPTI
Published on

மக்களவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தின்போது, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசினார். அப்போது அவர், “பட்ஜெட் அல்வா தயாரிப்பில்கூட ஓபிசி பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கிறது. பட்ஜெட் தயாரிப்பிலும் அப்படித்தான். இதற்காகவே நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிறோம். I.N.D.I.A. கூட்டணி ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் கொண்டுவருவோம்” என்றார்.

அப்போது பாரதிய ஜனதா எம்.பி. அனுராக் தாக்கூர், “சாதி என்னவென்று தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகின்றனர்” என ராகுல் காந்தியை நோக்கிக் கூறினார்.

அனுராக் தாக்கூர், ராகுல் காந்தி
''சாதி தெரியாதவர் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பேசுவதா?'' - மக்களவையில் அனுராக் தாக்கூர் பேச்சு

பாஜக எம்பியின் சாதி குறித்த இந்தப் பேச்சு, அவையில் கடும் கண்டனங்களை எழுப்பியது. இதற்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்தார். “நீங்கள் என்னை இழிவுபடுத்தினாலும் நான் கவலைப்படமாட்டேன். இதே நாடாளுமன்றத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான சட்டம் கொண்டுவருவோம்” என சூளுரைத்தார். இதற்கு அனுராக் தாக்கூரோ, “நான் யாருடைய பெயரையுமே குறிப்பிடவில்லை” என்றார். எனினும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "இந்த நாட்டில் பட்டியல் இன மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக யார் பேசினாலும், அவர்களுக்காகப் போராடினாலும், அவர்கள் மற்றவர்களிடமிருந்து அவதூறுகளைப் பெற வேண்டும். எல்லா அவதூறுகளையும் நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன். மகாபாரதத்தில் அர்ஜுனைப்போல, என்னால் மட்டுமே பார்க்க முடியும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம். அனுராக் தாக்கூர் தன்னை அவமானப்படுத்தினார். என்றாலும், அவரை நான் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை, எனக்கு அது தேவையுமில்லை" என்றார்.

இதையும் படிக்க: கையில் முத்தமிடாத சிறுவனை கன்னத்தில் அறைந்தாரா? சர்ச்சையில் சிக்கிய துருக்கி அதிபர்!

அனுராக் தாக்கூர், ராகுல் காந்தி
''சாதி தெரியாதவர் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பேசுவதா?'' - மக்களவையில் அனுராக் தாக்கூர் பேச்சு

இதுதொடர்பாக பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவரும் எம்பியுமான அகிலேஷ் யாதவ், "ஒருவரின் சாதியை எப்படிக் கேட்க முடியும்? யாரிடமும் சாதியைக் கேட்க முடியாது" எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையே, அனுராக் தாக்கூரின் பேச்சை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, “எனது இளம் மற்றும் ஆற்றல்மிக்க சக ஊழியரான அனுராக் தாக்கூரின் இந்தப் பேச்சு அனைவரும் அவசியம் கேட்க வேண்டிய ஒன்று. உண்மைகள் மற்றும் நகைச்சுவையின் சரியான கலவை. I.N.D.I.A கூட்டணியின் அழுக்கு அரசியலை அம்பலப்படுத்துகிறது” எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “இதன்மூலம் மூலம், நாடாளுமன்ற சிறப்புரிமையை கடுமையாக மீறுவதை மோடி ஊக்குவித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு புதிய, வெட்கக்கேடான சம்பவம். பாஜக-ஆர்எஸ்எஸ் மற்றும் நரேந்திர மோடியின் ஆழமான வேரூன்றிய சாதிவெறியை இது பிரதிபலிக்கிறது” என விமர்சித்திருந்தார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது இந்த நாட்டின் 80 சதவீத மக்களின் கோரிக்கை. இந்திய மக்கள்தொகையில் 80 சதவீதம் பேர் இப்போது நாடாளுமன்றத்தில் துஷ்பிரயேகம் செய்யப்பட்டுள்ளனர். இது தனது உத்தரவின் பேரில் நடந்ததா என்பதை நரேந்திர மோடி தெளிவுபடுத்த வேண்டும்” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

அனுராக் தாக்கூர், ராகுல் காந்தி
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எப்போது? புதிய அரசுக்கு உருவாகும் நெருக்கடி!

இந்த நிலையில், இன்று மக்களவை கூடியதும் ராகுல் காந்தியின் சாதியை கேட்டு விமர்சித்த அனுராக் தாக்கூர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. தவிர, இன்றும் இதுகுறித்து எம்பிக்கள் கருத்து தெரிவித்தனர். காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ரேணுகா சவுத்ரி, சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரஹலாத் ஜோஷி
பிரஹலாத் ஜோஷி

அதேநேரத்தில் இதுகுறித்துப் பதிலளித்த மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, "அனுராக் தாக்கூர் ராகுலின் சாதி பற்றி கேட்கவில்லை. சாதி தெரியாதவர்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள். இதுதான் சொல்லப்பட்டது. யாருடைய பெயரையும் எடுக்கவில்லை” எனப் பதிலளித்தார்.

இதற்கிடையே, பாஜக எம்பி அனுராக் தாக்கூர் பேசிய பேச்சை சமூக வலைதளங்களில் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

இதையும் படிக்க: “குட்டி தேவதையுடன் மோதினேன்..” - தோல்விக்குபிறகு கண்ணீருடன் கர்ப்பத்தை அறிவித்த வாள்வீச்சு வீராங்கனை

அனுராக் தாக்கூர், ராகுல் காந்தி
“சாதிவாரி கணக்கெடுப்புக்காக ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள்” - நெருக்கடியில் மத்திய அரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com