கேரளா | பேரிடர்களை முன்கூட்டியே கண்டறிய நிறுவப்படும் "MODEL PARAMETERS"! என்ன பலன் கிடைக்கும்?

கேரளாவில் பேரிடர்களை முன்கூட்டியே கண்டறிந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, "MODEL PARAMETERS" நிறுவ அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
MODEL PARAMETERS
MODEL PARAMETERSமுகநூல்
Published on

கேரளா திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “வயநாட்டில் நிகழ்ந்துள்ள பேரிடரின் மூலக்காரணம் குறித்து விரிவான ஆய்வு செய்யப்படும். தீவிர மழையின் தாக்கத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள ‘Model Parameters’ நிறுவுவதற்கான ஆய்வு, ‘INSTITUTE FOR CLIMATE CHANGE STUDIES’ நிறுவனம் மூலம் நடத்தப்படும்.

இந்த ஆய்வுகள் மூலம் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு, சூறாவளி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள, விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்pt web

இந்த சிறப்பு ஆய்வுகளுக்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும். இது கேரளாவில் பேரிடர்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வதோடு, பேரிடர்களை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவும்.

MODEL PARAMETERS
வயநாடு நிலச்சரிவு| பாலம் கட்டி மக்களை மீட்கும் ராணுவத்திற்கு கடிதம் எழுதிய 3ஆம் வகுப்பு மாணவர்!

மேலும் இதற்கான நடவடிக்கைகளை விரைந்து துவக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். இத்துடன் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் கட்டித் தருவதாக உறுதியளித்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆகியோருக்கு நன்றியும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com