ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஞாயிற்றுக்கிழமை விழாக்கள் இருப்பதால் வாக்கு எண்ணிக்கை தள்ளிவைக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது. அதன்படி, மிசோரமில் நாளை வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்டுள்ளன. 40 இடங்களை கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி ந டத்தப்பட்ட தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தேர்தலுக்கு பிந்தய கருத்துக்கணிப்புபடி மிசோரமில் ஆளும் கட்சியான மிசோ தேசிய முன்னணி மற்றும் ஜோரம் மக்கள் இயக்கம் இடையே கடும் போட்டி நிலவும் என தெரியவந்துள்ளது.