காவி அணிவதால் என்னை விமர்சிக்கிறார்கள்: யோகி ஆதித்யநாத் புகார்

காவி அணிவதால் என்னை விமர்சிக்கிறார்கள்: யோகி ஆதித்யநாத் புகார்
காவி அணிவதால் என்னை விமர்சிக்கிறார்கள்: யோகி ஆதித்யநாத் புகார்
Published on

உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரான யோகி ஆதித்யநாத், தான் காவி உடை அணிந்திருப்பதால், தன்னைப் பற்றி தவறான கருத்துகள் பரப்பப்படுகிறது என்ற குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

உ.பி.முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பிறகு வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை, தேவையற்ற, சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என எதிர்க்கட்சிகளும், சமூக வலைதளங்களிலும் அதிருப்தி எழுந்துள்ளது.

அரசு அலுவலகங்களில் பான் மசாலா எடுத்துக் கொள்ளக்கூடாது, அரசுப் பணியாளர்கள் வேலை நேரத்தை விட கூடுதலாக வேலை செய்யவேண்டும், சட்ட விரோத இறைச்சிக் கூடங்களை மூடியது உட்பட பல நடவடிக்கைகளின் மீது சர்ச்சை எழுப்பப்பட்டது.

இந்நிலையில் நேற்று இந்தச் சர்ச்சைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த யோகி ஆதித்யநாத், “என்னைப் பற்றி தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் காவி உடையில் இருப்பதால் இத்தகைய தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. காவி நிறத்தை வெறுப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

சமத்துவம் மற்றும் சமாதானம் என்ற பெயரால் நாட்டின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் அழிக்க நினைப்பவர்கள், தன் நடவடிக்கைகளால் பயம் கொண்டிருப்பதாகக் கூறிய அவர், எங்களின் தனித்துவமான ஆட்சி முறையால் அனைத்துப் பிரிவு மக்களின் அபிமானத்தையும் பெறுவோம் என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com