உத்திர பிரதேசத்தில் தொடர்ந்து தலித் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமையும் ஒரு சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்திர பிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்தில் , மின்துறையில் ஒப்பந்த முறையில் வேலை செய்யும் ஊழியரான இவர் தனியாக ஒரு ஸ்வீட் கடையும் நடத்தி வருகிறார்.கடந்த சனிக்கிழமை, தனது ஸ்வீட் கடைக்கு அருகில் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கும் ஒரு தலித் சிறுமி தனியாக இருப்பதைக் கவனித்தவர், அச்சிறுமியை அருகிலிருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்று இனிப்புகளைக் கொடுத்து பாலியல் வன்முறை செய்துள்ளார். பின், அங்கிருந்த சேற்று மண்ணை அள்ளி அச்சிறுமியின் வாயில் அடைத்துள்ளார். இந்த சம்பவத்தின் போது அச்சிறுமி உயிரிழந்துள்ளார்.
பின்னர், அச்சிறுமியின் வீட்டின் அருகே இருக்கும் ரயில் தண்டவாளத்தின் அருகே சிறுமியின் உடல் நேற்று கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து காவல்துறை சந்தேகத்தின் பேரில் மின் ஊழியர் கைது செய்து விசாரணை நடத்திய போது, அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஐ.பி.சி பிரிவுகள் 302 ( கொலை ), 373-3 ( மைனரை பாலியல் வன்கொடுமை செய்தல்) , போக்சோ மற்றும் எஸ்/எஸ்.டி பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அச்சிறுமியின் உடை மற்றும் உடல் இருக்கும் டி.என்.ஏ மாதிரிகளை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளது காவல்துறை.