தமிழ்நாட்டின் திருச்சி உள்ளிட்ட சிலப் பகுதிகளில் உர தட்டுப்பாடு உள்ளதாக வெளியான வதந்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும், ராஜஸ்தானில் சிலப் பகுதிகளில் உரத் தட்டுப்பாடு இருப்பதாக சொல்லப்படுவதும் தவறு எனவும் ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரபி பருவத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாட்டில் போதுமான அளவு உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தேவைக்கேற்ப உரங்களை அனுப்புகிறது என்றும், மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான விநியோகத்தை உறுதி செய்வது அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பாகும் எனவும் அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் உரங்களின் கையிருப்பு போதிய அளவில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அகில இந்திய அளவில் யூரியாவின் தேவை 180.18 லட்சம் மெட்ரிக் டன்னாகும். 16.11.2022 வரையிலான தேவை 57.40 லட்சம் மெட்ரிக் டன் என கணிக்கப்பட்ட நிலையில், 92.54 லட்சம் மெட்ரிக் டன் கையிருப்பில் இருப்பதை உரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
"இந்தக் காலகட்டத்தில் யூரியா விற்பனை 38.43 லட்சம் மெட்ரிக் டன்னாகும். மேலும், தற்போது 54.11 லட்சம் மெட்ரிக் டன் மாநிலங்கள் கைவசம் இருப்பில் உள்ளது. இது தவிர கூடுதலாக யூரியா உற்பத்தி நிலையங்களில் 5.03 லட்சம் மெட்ரிக் டன்னும் துறைகமுகங்களில் 5.03 லட்சம் மெட்ரிக் டன்னும் யூரியா தேவையை சமாளிக்க கையிருப்பில் உள்ளன" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23-ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அகில இந்திய அளவில் டை அமோனியம் ஃபாஸ்பேட் தேவை 55.38 லட்சம் மெட்ரிக் டன்னாகும். 16.11.2022 வரையிலான தேவை 26.98 லட்சம் மெட்ரிக் டன் என கணிக்கப்பட்ட நிலையில், 36.90 லட்சம் மெட்ரிக் டன் கையிருப்பில் இருப்பதை உரத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. இந்தக் காலகட்டத்தில் டிஏபி விற்பனை 24.57 லட்சம் மெட்ரிக் டன்னாகும். மேலும், தற்போது 12.33 லட்சம் மெட்ரிக் டன் மாநிலங்களின் கைவசம் இருப்பில் உள்ளது. இது தவிர கூடுதலாக டிஏபி உற்பத்தி நிலையங்களில் 0.51 லட்சம் மெட்ரிக் டன்னும் துறைகமுகங்களில் 4.51 லட்சம் மெட்ரிக் டன்னும் டிஏபி தேவையை சமாளிக்க கையிருப்பில் உள்ளது என அமைச்சகம் விளக்கியுள்ளது.
2022-23-ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அகில இந்திய அளவில் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் தேவை 14.35 லட்சம் மெட்ரிக் டன்னாகும். 16.11.2022 வரையிலான தேவை 5.28 லட்சம் மெட்ரிக் டன் என கணிக்கப்பட்ட நிலையில், 8.04 லட்சம் மெட்ரிக் டன் கையிருப்பில் இருப்பதை உரத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. இந்த காலகட்டத்தில் எம்ஓபி விற்பனை 3.01 லட்சம் மெட்ரிக் டன்னாகும். மேலும், தற்போது 5.03 லட்சம் மெட்ரிக் டன் மாநிலங்களின் கைவசம் இருப்பில் உள்ளது. இது தவிர கூடுதலாக துறைகமுகங்களில் 1.17 லட்சம் மெட்ரிக் டன் எம்ஓபி தேவையை சமாளிக்க கையிருப்பில் உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அகில இந்திய அளவில் என்பிகேஎஸ்-ன் தேவை 56.97 லட்சம் மெட்ரிக் டன்னாகும். 16.11.2022 வரையிலான தேவை 20.12 லட்சம் மெட்ரிக் டன். ஆனால் அதற்கு எதிராக 40.76 லட்சம் மெட்ரிக் டன் இந்தியாவில் கையிருப்பில் இருப்பதை உரத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. இந்த காலக்கட்டத்தில் என்பிகேஎஸ்-ன் விற்பனை 15.99 லட்சம் மெட்ரிக் டன்னாகும். மேலும், தற்போது 24.77 லட்சம் மெட்ரிக் டன் மாநிலங்களின் கைவசம் இருப்பில் உள்ளது. இதுதவிர கூடுதலாக என்பிகேஎஸ் உற்பத்தி நிலையங்களில் 1.24 லட்சம் மெட்ரிக் டன்னும் துறைகமுகங்களில் 2.93 லட்சம் மெட்ரிக் டன்னும் என்பிகேஎஸ் தேவையை சமாளிக்க கையிருப்பில் உள்ளது.
2022-23 ஆம் ஆண்டு ரபி பருவத்தில் அகில இந்திய அளவில் எஸ்எஸ்பி-யின் தேவை 33.64 லட்சம் மெட்ரிக் டன்னாகும். 16.11.2022 வரையிலான தேவை 14.05 லட்சம் மெட்ரிக் டன் என கணிக்கப்பட்ட நிலையில், 24.79 லட்சம் மெட்ரிக் டன் கையிருப்பில் இருப்பதை உரத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. இந்தக் காலகட்டத்தில் எஸ்எஸ்பி-யின் விற்பனை 9.25 லட்சம் மெட்ரிக் டன்னாகும். மேலும், தற்போது 15.54 லட்சம் மெட்ரிக் டன் மாநிலங்களின் கைவசம் இருப்பில் உள்ளது. இது தவிர கூடுதலாக எஸ்எஸ்பி உற்பத்தி நிலையங்களில் 1.65 லட்சம் மெட்ரிக் டன் தேவையை சமாளிக்க கையிருப்பில் உள்ளது. தேவைக்கு அதிகமாகவே இந்த உரங்கள் கையிருப்பில் உள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.