Amphan புயலானது மேற்கு வங்கத்திற்கும், பங்களாதேஷுக்கும் இடையே இன்று மதியத்திற்கு மேல் அல்லது மாலையில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக ஒடிசா மாநில பகுதிகளில் சூறைக்காற்று வீசி வருகிறது.
இந்நிலையில் Amphan புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், ''வங்கக்கடலில் உருவான Amphan புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.
நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்