24 மணி நேரமும் குறைந்த கட்டணத்தில் தடையின்றி மின்சாரம் கிடைக்கவேண்டும் - ஆர்.கே.சிங்

24 மணி நேரமும் குறைந்த கட்டணத்தில் தடையின்றி மின்சாரம் கிடைக்கவேண்டும் - ஆர்.கே.சிங்
24 மணி நேரமும் குறைந்த கட்டணத்தில் தடையின்றி மின்சாரம் கிடைக்கவேண்டும் - ஆர்.கே.சிங்
Published on

நாடு முழுவதும் 24 மணி நேரமும் குறைந்த கட்டணத்தில் தடையின்றி மின்சாரம் கிடைப்பதை உத்திரவாத படுத்துவதே அடுத்த நடவடிக்கை என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.

மத்திய மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், மாநிலங்களின் மின்சாரத்துறை கூடுதல் தலைமை செயலர்கள், முதன்மை செயலர்கள், மத்திய பொதுத்துறை மின் நிறுவனங்களின் தலைவர்கள், நிர்வாக இயக்குநர்கள் கலந்துகொண்ட ஆய்வு, திட்டமிடுதல் மற்றும் கண்காணிப்பு கூட்டத்திற்கு இன்று தலைமை தாங்கினார். இதில் மின்சாரத்துறை இணையமைச்சர் கிருஷண் பால் குர்ஜார், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் பகவந்த் குபா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆர்.கே.சிங் தமது தொடக்க உரையில், நடப்பு அரசு எரிசக்தி துறையை நெடிய முன்னேற்றத்துக்கு கொண்டு வந்துள்ளதாகக் கூறினார். நாடு தற்போது மின்மிகை நாடாக மாறியுள்ளது எனவும், நாடு முழுவதும் ஒரே தொகுப்பில் இணைக்கப்பட்டது மற்றும் மின் விநியோகமுறை வலுப்படுத்தப்பட்டது ஆகிய நடவடிக்கைகள் கிராமப்புறங்களில் 22 மணி நேரத்துக்கும், நகர்ப்புறங்களில் 23.5 மணி நேரத்துக்கும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் குறைந்த கட்டணத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துவதே அடுத்தகட்ட நடவடிக்கை என்று அவர் உறுதியளித்தார். மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்வது இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை என்று கூறிய அமைச்சர், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் உலகத்தரம் வாய்ந்த சேவைகளை வழங்குவதே நமது முக்கிய நோக்கம் என்றார். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பசுமை எரிசக்திக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பிரதம மந்திரி- கேயுஎஸ்யுஎம் திட்டம், விவசாயிகளுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்கி அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கச் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com