நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினம் இன்று!

நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினம் இன்று!
நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினம் இன்று!
Published on

நாடாளுமன்ற தாக்குதல் நடத்தப்பட்டதன் 16வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தேதி நாடாளுமன்ற வளாகத்திற்குள் காரில் வந்த 5 தீவிரவாதிகள், பாதுகாப்பு தடுப்புகளை மீறி வளாகத்திற்குள் புகுந்து சராமரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பாதுகாப்புப் படையினர், பத்திரிகையாளர் ஒருவர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 
பாதுகாப்புப் படையினரின் பதிலடித் தாக்குதலில் தீவிரவாதிகள் 5 பேரும் கொல்லப்பட்டனர். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில் 2013ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் தாக்குதல் நடைபெற்று 16 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று, உயிர்ழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அதே போல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அப்போது மன்மோகன் சிங் மற்றும் மோடியும் கைக்குலுக்கி கொண்டனர். 
 
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு கடந்து வந்த பாதை

2001, டிசம்பர் 13 - நாடாளுமன்ற தாக்குதல்

2001, டிசம்பர் 15 - அப்சல் குரு, பேராசிரியர் ஹூலானி, அப்சன், செளகத் ஹூசைன் ஆகியோர் கைது

2001,டிசம்பர் 25- ஜெய்ஷ் இ முகமது தலைவர் மவுலானா மசூத் அஷாரை கைது செய்தது பாகிஸ்தான்

2002, ஜூன் 4 - அப்சல் குரு உள்ளிட்ட 4 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு

2002,டிசம்பர் 14- மவுலானா மசூத் அஷாரை விடுவிக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

2002,டிசம்பர் 18- அப்சல்குரு, ஹூலானி, செளகத் ஹூசைன் உள்ளிட்ட 3 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு

2003,அக்டோபர் 29 - பேராசிரியர் கிலானி வழக்கில் இருந்து விடுவிப்பு

2004,ஆகஸ்ட் 4 - அப்சல் குருவின் தூக்குத் தண்டனை உறுதி, செளகத்தின் தண்டனை குறைப்பு

2006,செப்டம்பர் 26- அப்சல் குருவின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு

2013 பிப்ரவரி 3- கருணை மனுவை நிராகரிப்பு, அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

2013 பிப்ரவரி 9- அப்சல் குரு திகார் ஜெயிலில் தூக்கிலிடப்பட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com