வங்கிக் கடன் மோசடி வழக்கில் டோமினிகாவில் சிக்கியுள்ள மெகுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க ஆன்டிகுவா வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் மெகுல் சோக்சியும் அவரது உறவினரான நிரவ் மோடியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தியாவிலிருந்து தப்பிய மெகுல் சோக்சி கடந்த 3 ஆண்டுகளாக ஆன்டிகுவா பார்படாஸ் நாட்டு குடிமகனாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அங்கிருந்து திடீரென தலைமறைவான மெகுல் சோக்சி டோமினிகாவில் சிக்கினார். அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்திய நிலையில், இந்தியாவிடமே மெகுல் சோக்சியை ஒப்படைக்க ஆன்டிகுவா கூறியுள்ளது.