ஆலோசனைக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு: பங்கேற்பு குறித்து மெஹபூபா நாளை முடிவு

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு: பங்கேற்பு குறித்து மெஹபூபா நாளை முடிவு
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு: பங்கேற்பு குறித்து மெஹபூபா நாளை முடிவு
Published on
பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்க மெஹபூபா முஃப்திக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும்போது, மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும், சட்டசபை தேர்தல் நடத்தப்படும்' என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
தற்போது ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதைத் தொடர்ந்து, மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பது குறித்தும், சட்டசபை தேர்தலை நடத்துவது குறித்தும், மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், வரும் 24-ம் தேதி டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட 14 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்வது தொடர்பாக முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியின் அரசியல் விவகாரக்குழு நேற்று ஸ்ரீநகரில் உள்ள மெஹபூபாவின் வீட்டில் கூடி விவாதித்தது. இந்த கூட்டத்தில், டெல்லியில் பிரதமர் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்க மெஹபூபாவுக்கே அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
'நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்' என மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com