மேகாலயா சுரங்க விபத்து: ஒரு மாதத்துக்குப் பின் ஒரு உடல் கண்டுபிடிப்பு

மேகாலயா சுரங்க விபத்து: ஒரு மாதத்துக்குப் பின் ஒரு உடல் கண்டுபிடிப்பு
மேகாலயா சுரங்க விபத்து: ஒரு மாதத்துக்குப் பின் ஒரு உடல் கண்டுபிடிப்பு
Published on

மேகாலயா சுரங்க விபத்தில் நீருக்கடியில் சென்று தேடும் ரோபோ உதவியுடன் ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேகாலயாவில் கிழக்கு ஜைன்டியா மாவட்டத்தில் ஏராளமான சுரங்கங்கள் உள்ளன. கைவிடப்பட்ட சில சட்ட விரோத சுரங்கங்களும் இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்த மாவட்டத்தில் உள்ள சான் கிராமத்தில், கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்று சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது. ’எலி வளை’ சுரங்கம் என்று சொல்லப்படுகிற இந்தச் சுரங்கத்துக்குள் மழை காரணமாக, அருகில் உள்ள லைத்தின் ஆற்றில் இருந்து கடந்த மாத ம் 13 ஆம் தேதி தண்ணீர் புகுந்தது. இதனால் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் 15 பேரில் 2 பேர் வெளியேறி விட் டனர். 13 பேர் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு படை, கடற்படை வீரர்கள் முகாமிட்டு அவர்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீரை வெளியேற்றும் பணியில் சக்தி வாய்ந்த மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல லட்சம் லிட்டர் தண் ணீரை வெளியேற்றியும் முன்னேற்றம் இல்லை. 

இதற்கிடையே, சுரங்கத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகளை விரைவுபடுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கு வி சாரணையின் போது, ’’சுரங்கம் பயங்கர ஆழத்தில் இருக்கிறது. கருநிறத்தில் தண்ணீர் இருப்பதால் உள்ளே செல்வது கஷ்டமாக இருக்கிறது. பல லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றினாலும் ஆற்று நீர் உள்ளே வந்து கொண்டிருப்பதால் தண்ணீர் அளவு குறையவில்லை. கடற்படை வீரர் களால் 90 அடி ஆழம் வரை மட்டுமே செல்ல முடியும் என்பதால் மீட்பு பணியில் சிக்கல் எழுந்திருக்கிறது’’ என்று கூறப்பட்டிருந்தது.

ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், நீருக்கடியில் சென்று தேடும் ரோபோ (Underwater ROV)மூலம் கடந்த சில நாட்களாக தேடுதல் நடந் தது. இந்நிலையில் 160 அடி ஆழத்தில், எலிவளை சுரங்கத்தின் வாயிலில் ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை வெளியே மீட்கும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

‘’நீருக்கடியில் சென்று தேடும் ரோபோ முலம் ஒரு உடலை, கடற்படை கண்டு பிடித்துள்ளது. அதை வெளியே கொண்டு நடவடிக்கையில் இன்று ஈடுபட இருக்கிறோம். தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்று கூடுதல் இணை கமிஷனர் ஷையம்லீ தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com