விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக விவரிக்கச் சென்ற போது பிரதமர் மோடி , அவர்கள் எனக்காகவா உயிரிழந்தார்கள் என கேள்வி எழுப்பியதாக மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்
மேகலாய ஆளுநர் சத்தியபால் மாலிக் அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்துப்பேசியுள்ளார். அந்த சந்திப்பில் தனக்கு ஏற்பட்ட அதிருப்தி குறித்து அவர் தற்போது பேசியிருக்கிறார். 'பிரதமர் மோடி மிகவும் திமிரு பிடித்தவர்'' என்று அவர் தெரிவித்துள்ளார். வெறும் 5 நிமிடம் நடந்த இந்த சந்திப்பு குறித்து ஹரியானாவில் நடந்த விழாவில் பேசிய சத்தியபால் மாலிக், ''பிரதமர் மோடி மிகவும் திமிர் பிடித்தவர். நான் அவரிடம் நம்முடைய 500 விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள் என்று கூறினேன்.
அதற்கு பதிலளித்த மோடி, 'அவர்கள் அனைவரும் எனக்காகவா இறந்தார்கள்?'' என்றார். அதற்கு நான் ''நீங்கள்தான் இந்தியாவின் பிரதமர் எனக் கூறினேன். இறுதியாக நான் பிரதமரிடம் இந்த விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் செய்தேன். பின்னர், அவர் என்னிடம் அமித் ஷாவை சந்திக்குமாறு கூறினார். நான் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது, 'அவர் ஏதோ பேசிவிட்டார் விடுங்கள். தொடர்ந்து என்னை சந்தியுங்கள்'' என அமித்ஷா கூறியதாக சத்தியபால் மாலிக் தெரிவித்துள்ளார்.