மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் மேகதாது அணை ட்டத்திற்கு ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் தண்ணீர் அளவு குறைந்து விடும். இதனால் மேகதாது அணை கட்ட தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.