இந்தியா
"மருத்துவரீதியான கருக்கலைப்பு (MTP) விதிகளில் திருத்தம் தேவை" - வழக்கறிஞர் அஜிதா விளக்கம்
மருத்துவர்கள் குழு வழங்கிய அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள் 26 வார கருவை கலைக்க அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் தன் வயிற்றில் வளரும் 26 வார கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தான் மன அழுத்தம் உள்ளிட்ட சில பிரச்சனைகளை சந்தித்து வரும் சூழலில் மேலும் ஒரு குழந்தையை பெற்றெடுக்க விரும்பவில்லை என்றும் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மருத்துவர்கள் குழு வழங்கிய அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள் 26 வார கருவை கலைக்க அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக எழுந்த சில கேள்விகளுக்கான பதில்களை புதிய தலைமுறையிடம் வழக்கறிஞர் அஜிதா பகிர்ந்து கொண்டார்