தனிநபர் உரிமைகளில் ஊடகங்கள் தலையிடக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை

தனிநபர் உரிமைகளில் ஊடகங்கள் தலையிடக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை
தனிநபர் உரிமைகளில் ஊடகங்கள் தலையிடக் கூடாது - நீதிமன்றம் எச்சரிக்கை
Published on

ஊடகத் துறையில் உள்ளவர்கள் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், தனிநபர் உரிமைகளில் ஊடகங்கள் தலையிடக் கூடாது என டெல்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

டெல்லியில் வசித்து வரும் ஷேர் புரோக்கர், வீட்டுவசதி வாரியத்திலும் உறுப்பினராக உள்ளார். இவரை பற்றி 2007, டிசம்பர் மாதம் டெல்லியில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று அவதூறாக கட்டுரை வெளியிட்டது. இதை கண்டித்து அந்த நபர், சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு பத்திரிகை நிர்வாகம் மறுத்ததுடன், வீட்டு வசதி வாரியத்தில் உறுப்பினராக உள்ள அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் செய்தி வெளியிட்டது.

இதையடுத்து, அந்த நபர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, பத்திரிகை நிறுவனர் மற்றும் ஆசிரியர் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி ராஜ்கபூர் கூறுகையில், தவறான கட்டுரை வெளியிட்டதால் பாதிக்கப்பட்டவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, பத்திரிகை ஆசிரியர் மற்றும் நிபரும் பாதிப்படைந்த நபருக்கு நஷ்ட ஈடாக 30,000 மற்றும் 20,000 ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தனிநபர் உரிமைகளில் ஊடகங்கள் தலையிடக் கூடாது என்றும், ஊடகத் துறையில் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட அதிகளவில் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com