வீங்கிச் செல்லும் வயிறு: விசித்திர நோயால் தவிக்கும் கார் மெக்கானிக்!
வயிறு மட்டும் வீங்கிக்கொண்டே செல்வதால், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தவித்து வருகிறார்.
பீகார் மாநிலம் முஷாபர்பூரைச் சேர்ந்தவர், 19 வயது சுஜித்குமார். மெக்கானிக்கான இவருக்கு விசித்திர பிரச்னை. இவரது வயிறு மட்டும் வீங்கிக்கொண்டே செல்கிறது. அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. உள்ளூரில் உள்ள சில மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் வயிற்றின் வீக்கம் குறையவில்லை. இதனால் பெரும் கவலையில் இருக்கிறார் குமாரின் அம்மா, கஞ்சன் தேவி.
‘’குமாருக்கு எழு வயசா இருக்கும்போதுதான் இதை கவனிச்சோம். என்னடா இது வயிறு மட்டும் வீங்கிட்டே போகுதேன்னு டாக்டர்கிட்ட காண்பிச்சோம். ஆனால், அப்போதைய பிரச்னைக்கு மட்டும் மருந்து மாத்திரை தந்தாங்க. நிரந்தரமாக தீர்க்க வழி சொல்லல. வயிறு பெருசாயிட்டே போச்சு. தொடர்ந்து டாக்டரை பார்த்ததுல அவங்க, டெல்லிக்கு போயி, ஸ்பெஷலி ஸ்ட் டாக்டர் யாரையாவது பாருங்கன்னு சொல்லிட்டாங்க. அங்க போயி சிகிச்சை பண்ணற அளவுக்கு எங்ககிட்ட வசதியில்லை’’ என்கிறார்.
இந்த வயிறு பிரச்னை தவிர குமாருக்கு வேறு பிரச்னை ஏதுமில்லை என்று கூறும் காஞ்சன் தேவி, இந்த வீங்கும் வயிறு காரணமாக குமாருக்கு நண்பர்களே இல்லை என்கிறார்.