இந்தியா
இனி உணவுகளில் தக்காளியை சேர்க்கப்போவதில்லை! Mcdonald's அதிரடி அறிவிப்பு! #Video
தாங்கள் தயாரிக்கும் உணவுகளில் தக்காளியைச் சேர்க்கப்போவதில்லை என மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் டெல்லி கிளை அறிவித்துள்ளது.
வடமாநிலங்களில் ஒரு கிலோ தக்காளி 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ், தக்காளி விலை உயர்வு காரணமாக குறிப்பிட்ட காலத்துக்குத் தங்களின் உணவு வகைகளில் தக்காளியைப் பயன்படுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசெளகரியத்துக்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது.