சமூக ஊடகங்களுக்கு அடிமையாகாத பெண் வேண்டும் - வைரலான மேட்ரிமோனியல் விளம்பரம்

சமூக ஊடகங்களுக்கு அடிமையாகாத பெண் வேண்டும் - வைரலான மேட்ரிமோனியல் விளம்பரம்
சமூக ஊடகங்களுக்கு அடிமையாகாத பெண் வேண்டும் - வைரலான மேட்ரிமோனியல் விளம்பரம்
Published on

மேற்கு வங்கம் கமார்புகூரைச் சேர்ந்த ஒரு நபரின் மேட்ரிமோனியல் விளம்பரம் சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. அப்படி என்ன சிறப்பு அந்த விளம்பரத்தில் என்றுதானே யோசிக்கத் தோன்றுகிறது?

நிதின் சாங்வான் ஐஏஎஸ் என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் செய்தித்தாளில் வந்த ஒரு விளம்பரத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் ’’மணமகன்/மணமகள்களே கவனியுங்கள். இப்போது மேட்சிங் விதிமுறைகள் மாறிவிட்டன’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட புகைப்படத்தில், ஒரு மணமகன், தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்கவேண்டும் என்பதை விவரமாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதில், சாட்டர்ஜீ 37/5’7’’யோகா பயிற்சியாளர், வசீகரமானவர், எந்த கெட்ட பழக்கமும் இல்லை, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் ஆராய்ச்சியாளர் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் தனக்கு வீடு, கார் இருப்பதாகவும், பெற்றோருடன் வசித்துவருவதாகவும், கமார்புகூரில் பண்ணைவீடு இருப்பதாகவும் கூறியுள்ளார். மணமகளிடமிருந்து தான் எதையும் பார்க்கவில்லை எனவும், ஆனால், அழகான, கலரான, உயரமான, ஒல்லியான ஒரு பெண் வேண்டும் எனவும், குறிப்பாக அந்த பெண் சமூக ஊடங்களுக்கு அடிமையாக இருக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

நிதின் சாங்வானின் இந்த ட்வீட் வைரலாகி வருவதோடு, பலரின் கேலிக்கும் ஆளாகி இருக்கிறது. இதுபோன்ற பெண் கிடைப்பது கடினம், மிகவும் கடினமான விதிமுறைகளாக இருக்கிறது, வாழ்நாள் முழுவதும் தனிமையில் வாழப்போகிறார் என்பது போன்ற பல பெண்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com