உ.பியில் ஆதரவற்ற பசுக்களை அரவணைக்கும் ஜெர்மனி பெண்

உ.பியில் ஆதரவற்ற பசுக்களை அரவணைக்கும் ஜெர்மனி பெண்
உ.பியில் ஆதரவற்ற பசுக்களை அரவணைக்கும் ஜெர்மனி பெண்
Published on

உத்தரபிரதேச மாநிலத்தில் மதுரா நகரில் வசித்து வரும் ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஆதரவற்ற, காயமடைந்த பசுக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்து வருகிறார். 

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் ஜெர்மனியை சேர்ந்த சுதேவி தாசி என்ற பெண் இவர் 1978-ம் ஆண்டு சுற்றுலா பயணத்திற்காக உத்தர பிரேதேசம் வந்துள்ளார். அங்கு ஏராளமான பசுக்கள் இருப்பதை கண்டு அதிசயித்த அவர், பசு ஒன்றை வளர்க்கத் தொடங்கிய அதனை பராமரிக்க ஆரம்பித்துள்ளார். அதன்பின் இந்தியாவிலேயே தங்கிய அவர், தற்போது ஆயிரத்து 200 பசுக்களை வளர்க்கிறார். ஜெர்மனியில் உள்ள சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வாடகையை பயன்படுத்தி, பசுவிற்காக ஒரு மடத்தை அவர் அமைத்துள்ளார். அங்கு காயமடைந்த பசுக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார். மேலும் பசுகளுக்காக அவர் ஒரு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளார். மக்கள் சுயநலவாதியாக இருப்பதைவிட்டு மற்றவர்களுக்கு உதவும் குணம் படைத்தவர்களாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார் சுதேவி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com