தமிழக மக்களிடம் கண்ணீருடன் கதறும் கேரள குடும்பம்

தமிழக மக்களிடம் கண்ணீருடன் கதறும் கேரள குடும்பம்
தமிழக மக்களிடம் கண்ணீருடன் கதறும் கேரள குடும்பம்
Published on

அத்தை வீட்டிற்கு சென்ற வழியில் மாயமான மாணவியை தேடும் பணியில் 125 கேரள காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள வெச்சூசிரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர், கல்லூரி மாணவி
ஜெஸ்னா. இவர் காஞ்சிரப்பள்ளியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். விடுமுறை தினத்தில் சொந்த ஊர்
சென்றிருந்த ஜெஸ்னா, அங்கிருந்து தனது அத்தை வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளார். ஆனால் கேரளாவில் தனது ஊரைத் தவிர
வேறெங்கும் செல்லாதவர் ஜெஸ்னா. இந்நிலையில் கடந்த மார்ச் 21ஆம் தேதி ஜெஸ்னா வசிக்கும் தனது அத்தையை தொலைபேசியில்
தொடர்பு கொண்டு, ‘உங்கள் வீட்டிற்கு வரப்போகிறேன்’ என்று கூறியுள்ளார். ‘ஜெஸ்னா தனியா வருவளா’ என நினைத்துக்கொண்டு
அவரது அத்தை சாதரணமாக எடுக்கொண்டுள்ளார்.

அடுத்த நாள் வீட்டிலிருந்து புறப்பட்ட ஜெஸ்னா, முதலில் ஆட்டோ ஒன்றை பிடித்து பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து எருமேலிக்கு பேருந்தில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து முன்டக்கயத்திற்கு பேருந்தைப் பிடித்துள்ளார். ஆனால்
அதன்பின்னர் ஜெஸ்னா முன்டக்கயம் வந்து சேரவில்லை. அவர் எங்கு என்றார்? என்பது இதுவரை விடை தெரியாத புதிராக உள்ளது.
இதுகுறித்து பத்தனம்திட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜெஸ்னாவை தேடினர். 50 நாட்கள் கடந்த பின்பும் வழக்கில்
எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தால், காணாமல்போன ஜெஸ்னா பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு
வழங்கப்படும் என கேரளா அரசு அறிவித்தது.

இந்நிலையில் ஜெஸ்னாவின் குடும்பத்தார் மற்றும் அக்கா ஜெஃபி, தமிழக ஊடகங்கள் மற்றும் மக்களிடம் வாயிலாக தங்கள் ‘என் தங்கைய கண்டுபிடிங்க. தயவுசெய்து உதவுங்க’ என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஜெஸ்னாவை தேடும் பணியை கேரள காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது. இதற்காக 125 பேர் கொண்ட தனிப்படை கேரள மாநிலம் இடுக்கி வனத்துறையில் தேடுதல் வேட்டை நடத்தி
வருகிறது. திருவல்லா மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையிலான இந்தத் தனிப்படையில், 5 காவல்
கண்காணிப்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர். தற்போது எருமேலி, முன்டக்கயம், பீர்மேடு மற்றும் குட்டிக்கனம் ஆகிய வனப்பகுதிகளில்
தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே எருமேலியில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதித்த காவல்துறையினர், ஜெஸ்னா பேருந்தில் இருந்து இறங்கி
முன்டக்கயம் செல்லும் பேருந்தில் ஏறுவதை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அதன்பின்னர் ஜெஸ்னா எங்கே போனார்? என்பதே
விடையில்லா கேள்வியாக உள்ளது. அவர் கடத்தப்பட்டாரா? அல்லது வேறென்ன  நடந்தது? என்ற கோணத்தில் காவல்துறையினர்
விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே காஞ்சிபுரம் அருகே எரிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடல் ஜெஸ்னா என சந்தேகப்பட்டு, பின்னர்
அது அண்ணாநகரை சேர்ந்த பெண் என்பது உறுதி செய்யப்பது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com