சர்வதேக மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பல்வேறு துறைகளில் சாதித்து வரும் பெண்களை கவுரவிக்கும் விதமாகவும் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையடுத்து தெலங்கானா அரசாங்கம் மாநிலத்தில் பணிபுரியும் பெண்களுக்கு நாளை விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தலைமை செயலாளர் எஸ்.கே. ஜோஷி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பெங்களூரு இந்திரா கேண்டீன்னில் நாளை பெண்களுக்கு மூன்று வேளையும் உணவு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பர்வீன் டிராவல்ஸ் பெண்களுக்கு இலவச பயணச் சலுகை வழங்கியுள்ளது. பிப்ரவரி, 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை 5 நாட்களுக்கு பெண்களுக்கு இலவச பயணச் சலுகையை பர்வீன் டிராவல்ஸ் அறிவித்துள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா விமானம் முழுக்கப் பெண்களை கொண்டு இயக்கப்பட்டது.பல்துறையிலும் சாதனை படைத்து வரும் மகளிரைப் போற்றும் வகையில், மகளிர் தினத்தையொட்டிய சிறப்பு சேவையாக கொல்கத்தாவில் இருந்து திமாபூர் வரையில் விமானி முதல் சிப்பந்திகள் வரை அனைத்துப் பணிகளிலும் பெண்களைக் கொண்டு இயக்கப்பட்டது. மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளுக்கும் ஏர் இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.