மராத்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து!

மராத்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் சமையல் எண்ணெய் வித்துகள் உற்பத்தியை அதிகரிக்க 10 ஆயிரம் கோடி ரூபாயிலான சிறப்பு திட்டத்திற்கும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
செம்மொழி அந்தஸ்து
செம்மொழி அந்தஸ்து முகநூல்
Published on

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை செய்தியாளர்களிடம் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். அப்போது மராத்தி, பாலி, பிராக்ருதம், அசாமி, வங்க மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கும் வரலாற்றுச்சிறப்பு மிக்க முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஏற்கனவே தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிலையில் அப்பட்டியலில் மேலும் 5 மொழிகள் இணைந்துள்ளன.

எண்ணெய் வித்துகள் உற்பத்தியை அதிகரிப்பதற்கென 10,103 கோடி ரூபாய் செலவில் சிறப்பு திட்டத்தை செயல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது இந்தியாவின் சமையல் எண்ணெய் பயன்பாட்டில் 57% வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிலையில் உள்நாட்டிலேயே எண்ணெய் வித்துகள் உற்பத்தியை அதிகரித்து எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

விவசாய வளர்ச்சிக்காகவும் உணவுப் பாதுகாப்புக்காகவும் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார். ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையாக 78 நாட்கள் ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் இதனால் 11 லட்சத்து 72 ஆயிரம் ரயில்வே பணியாளர்கள் பலன் பெறுவர் எனவும் கூறினார்.

செம்மொழி அந்தஸ்து
ஹரியானா சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதித்த சேவாக்!

இதற்கிடையே எக்ஸ் சமூக தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதில் மகிழ்ச்சி கொள்வதாகவும் அவை இ்ந்தியாவின் செழுமை மிகுந்த கலாசாரத்தின் பிரதிபலிப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். தத்தமது மாநில மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதற்காக மகாராஷ்ட் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அசாமிய முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் நன்றி தெரிவித்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com