சாம்சங் ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய மத்திய அமைச்சர் மன்சுக்!

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, முதலமைச்சர் முக ஸ்டாலின்
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, முதலமைச்சர் முக ஸ்டாலின்pt web
Published on

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 15வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாம்சங் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையே 4 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் ஊழியர்கள்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் ஊழியர்கள்pt web

இந்த நிலையில் அந்த நிறுவனம் சார்பில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், போராட்ட விவகாரத்தில் மூன்றாவது அல்லது வெளி நபர்களின் தலையீட்டை, நிர்வாகம் ஒப்புக்கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தம் சட்டத்துக்கு விரோதமானது என கூறப்பட்டுள்ளதோடு, நியாயமான மற்றும் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, முதலமைச்சர் முக ஸ்டாலின்
சித்தராமையா மீது வழக்குபதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

இதனிடையே இந்த போராட்டம் தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, விரைவான மற்றும் இணக்கமான தீர்வை ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் தீர்வை ஏற்படுத்த, தனது அமைச்சகம் முழு ஆதரவை வழங்கும் எனவும் மன்சுக் மாண்டவியா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

ஏற்கனவே தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தலைமையில், சாம்சங் நிறுவனத்துடனும், தொழிற்சங்க நிர்வாகிகளுடனும் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, முதலமைச்சர் முக ஸ்டாலின்
மீண்டும் பணி அழுத்த மரணம்| லக்னோ வங்கி ஊழியர் மயங்கி விழுந்து பரிதாப உயிரிழப்பு - எழும் கேள்விகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com