ஜி.சி. முர்மு ராஜினாமா : ஜம்மு காஷ்மீரின் புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்

ஜி.சி. முர்மு ராஜினாமா : ஜம்மு காஷ்மீரின் புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்
ஜி.சி. முர்மு ராஜினாமா : ஜம்மு காஷ்மீரின் புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்
Published on

ஜம்மு காஷ்மீரின் புதிய துணநிலை ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவர்களுள் ஒருவருமான மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் ஜி.சி. முர்மு தனது பதவியை திடீரென ராஜினா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், துணை நிலை ஆளுநராக இருந்த ஜி.சி. முர்மு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 60 வயதான முர்மு பதவி விலகியதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் அவருக்கு மத்திய அரசு சார்பில் வேறு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிதாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்ட பின்னர் அதன் முதன் துணைநிலை ஆளுநராக ஜி.சி. முர்மு கடந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அளுநராக நியமிக்கப்படும் போது அவர் நிதியமைச்சகத்தில் ஒரு செயலாளராக பதவி வகித்துவந்தார். ஐஏஎஸ் அதிகாரியான முர்மு, பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அவரது முதன்மை செயலாளராக பதவி வகித்துள்ளார். இதனிடையே, முர்முவின் ராஜினாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் புதிய துணநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2014 -19 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தவர். முதலில் ரயில்வே துறையில் இணை அமைச்சர் ஆகவும், பின்னர் தொலைத் தொடர்புத்துறையில் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஆகவும் இருந்தவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com