முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கிற்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் உடனே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவர் இதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என உறுதியானது. இதையடுத்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு நேற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவர் உடல் நலம் பெற்றதால், இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.