“இன்று நான் பாதுகாப்பாக இருக்க பாஜக தலைவர்கள்தான் காரணம்” - மணீஷ் காஷ்யப் பரபரப்பு பேட்டி!

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பி கைதுசெய்யப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்த மணிஷ் காஷ்யப், பாஜகவில் நேற்று இணைந்துள்ளார். இந்நிலையில் சிறையில் இருந்து பத்திரமாக தான் வெளியே வர பாஜக தலைவர்களின் ஆதரவுதான் காரணம் என்றுள்ளார்.
பாஜக-வில் இணைந்த மணீஷ் காஷ்யப்
பாஜக-வில் இணைந்த மணீஷ் காஷ்யப்புதிய தலைமுறை
Published on

செய்தியாளர் - ராஜீவ்

கடந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அந்த வீடியோக்கள் வடமாநில தொழிலாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, சட்ட ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியது.

யூடியூபர் மணீஷ் காஷ்யப்
யூடியூபர் மணீஷ் காஷ்யப்

அச்சூழலில் போலி வீடியோக்களை பகிர்ந்தாக பீகாரை சேர்ந்த  மணீஷ் காஷ்யப் என்ற யூடியூபர் மீது பெருங்குடியை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் மதுரை மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் , வழக்குப் பதிவு செய்தது காவல்துறை.

பாஜக-வில் இணைந்த மணீஷ் காஷ்யப்
பீகார் தொழிலாளர்கள் விவகாரம்: வதந்தி பரப்பியதாக உ.பி. பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு

மேலும் இந்த விவகாரத்தில் பல்வேறு நபர்கள் மணீஷ் மீது புகார் அளித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த தமிழக காவல்துறையினர் நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். தேசிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியதற்காக அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு மீண்டும் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

மணீஷ் காஷ்யப்
மணீஷ் காஷ்யப்

இதனை எதிர்த்து டெல்லியை சேர்ந்த அவரது சகோதரர் திரிபுவன் குமார் திவாரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த விசாரணை முடிவில் காவல்துறை உரிய விதிகளை பின்பற்றி கைது செய்யவில்லை என கூறிய நீதிமன்றம் பாதுகாப்பு சட்ட வழக்கை ரத்து செய்தது.

அதேசமயம், மதுரை சைபர் கிரைம் போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#BREAKING | யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீதான வழக்கு ரத்து
#BREAKING | யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீதான வழக்கு ரத்து

இந்நிலையில் இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்ற மணீஷ் காஷ்யப் டெல்லியில் நேற்று தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். பாஜக தலைமையகத்தில் பாஜக எம்பி மனோஜ் திவாரி முன்னிலையில் மணீஷ் காஷ்யப்  பாஜகவில் இணைந்தார்.

புதிய தலைமுறைக்கு பிரதேக பேட்டி அளித்த மணீஷ் காஷ்யப், “நான் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொண்ட பிரச்னை குறித்து மட்டுமே குரல் எழுப்பினேன். குறிப்பாக பீகார் மாநிலத்தவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை கூறினேன். தவிர எந்த அரசுக்கோ அல்லது மாநிலத்திற்கோ எதிராக பேசவில்லை.

பாஜக-வில் இணைந்த மணீஷ் காஷ்யப்
கோவை | வாக்குரிமை மறுக்கப்பட்டதாக போராடியோர் கைகளில் வாக்களித்த மை.. ட்ரோலில் சிக்கியோர் சொல்வதென்ன?

தமிழகத்தில் ஸ்டாலின் ஆகட்டும், உதயநிதி ஸ்டாலின் ஆகட்டும், போலவே பீகாரில் லாலுவாகட்டும் தேஜஸ்வி யாதவாகட்டும்... புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் ஆதரவாளர்கள் அல்ல. இதன் காரணமாக நான் நிறைய பிரச்னைகளை சந்தித்துள்ளேன். மற்ற மாநிலங்களில் உள்ள பீகார் தொழிலார்களுக்கு தொடர்ந்து குரல் குடுப்பேன்.

பாஜக-வில் இணைந்த மணீஷ் காஷ்யப்
பாஜக-வில் இணைந்த மணீஷ் காஷ்யப்

தமிழத்தில் அண்ணாமலை ஒரு தலைசிறந்த தலைவர். மக்களவை தேர்தலில் பாஜக தமிழகத்தில் குறைந்தது 25 இடங்களில் வெற்றிபெறும் மற்றும் சட்டப்பேரவையில் பாஜக வெற்றிபெறும்” என தெரிவித்தார்.

மேலும் ஏ.என்.ஐ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “ஏழைக் குடும்பத்தின் மகனுக்கு பாஜக-வால்தான் இந்த கௌரவத்தை கொடுக்க முடியும். பாஜக ஏழைகள், பெண்கள், யூடியூபர்-கள், தாய்மார்கள் ஆகியோரை மதிக்கிறது. நான் எப்போதும் போல தேசியவாதத்திற்காக தொடர்ந்து பாடுபடுவேன். நான் முன்பு அதைச் செய்தபோது, ​​சில கட்சிகள் என்னைக் கைது செய்யவைத்து சிறையில் அடைத்தன.

அதுபோன்ற நேரத்தில் பல பாஜக தலைவர்கள் என்னை ஆதரித்தனர்... இன்று நான் சிறையில் இருந்து பத்திரமாக வெளியே வந்திருக்கிறேன் என்றால் அதற்கு என் அம்மாவின் ஆசியும், பாஜக தலைவர்களின் ஆதரவும்தான் காரணம்” என தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com