5 மாநில தேர்தல்: மணிப்பூரில் முற்றும் காங்கிரஸ் - பாஜக போர்... யாருக்கு கிடைக்கும் வெற்றி?

5 மாநில தேர்தல்: மணிப்பூரில் முற்றும் காங்கிரஸ் - பாஜக போர்... யாருக்கு கிடைக்கும் வெற்றி?

5 மாநில தேர்தல்: மணிப்பூரில் முற்றும் காங்கிரஸ் - பாஜக போர்... யாருக்கு கிடைக்கும் வெற்றி?
Published on

விரைவில் நடைபெற உள்ளது ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் என்றாலும் இதில் அதிகமாக விவாதிக்கப்பட கூடியது உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல்கள் ஆகத்தான் உள்ளது. உத்தராகண்ட், கோவா உள்ளிட்ட மற்ற இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் அவ்வப்பொழுது செய்திகளில் இடம் பிடித்தாலும் கூட மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் குறித்து குறைவான அளவிலேயே செய்திகள் உள்ளது. ஆனாலும் மணிப்பூர் சட்டமன்ற தேர்தலும் மிக விறுவிறுப்பானதாகத் தான் உள்ளது. அத்தகைய மணிப்பூர் தொகுதியின் நிலவரத்தை, இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.

2022 மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் தனியாக களம் இறங்கி இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது பாரதிய ஜனதா கட்சி. அதே நேரத்தில் இந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நம்பிக்கையின் காங்கிரஸ் கட்சி உள்ளது.

மணிப்பூரில் மொத்தம், 60 தொகுதிகள் உள்ளன. ஆகவே 31 சட்டமன்ற இடங்களை பெறக்கூடிய கட்சி இங்கு ஆட்சி அமைக்கலாம். மணிப்பூரின் வரலாற்றை பார்க்கையில், கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சி செலுத்தியது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மணிப்பூர் மாநிலத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியுமான ஒக்ராம் இபோபி சிங் தான், அரசுக்கு எதிரான பொது மக்களின் மனநிலை உள்ளிட்ட பல்வேறு அம்சஙகளையும் முறியடித்து தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை வெற்றிகரமாக ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தவர். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் கூட, ஆட்சியை இழந்திருந்தாலும் அதிக இடங்களை வென்ற தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வந்திருந்தது. எனினும் பெரும்பான்மைக்கு 10 இடங்கள் குறைவாக இருந்த நிலையிலும் உள்ளூர் கட்சிகளின் உதவியுடன் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை அமைத்து வெற்றிகரமாக 5 ஆண்டுகளையும் நிறைவுசெய்து அடுத்த தேர்தலுக்கு தயாராகி இருக்கிறது. எனவே இந்த முறை தேர்தலில் தனியாக களம் இறங்கி தேர்தலுக்கு பிறகான கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்ற முடிவிலேயே பாரதிய ஜனதா கட்சி உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளர்களாக இருக்கக்கூடிய மத்திய அமைச்சர் பிரதிமா பெளமிக், அசாம் மாநில அமைச்சர் அசோக் சிங்கால் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மறைமுகமாக இதனை சுட்டிக் காட்டி இருந்தனர். இந்த முறை தேர்தலில் முழு பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் என்றும், எனினும் தங்களது எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைப்பது சம்பந்தமாகவும் யோசித்து வருவதாக பேட்டி அளித்து இருந்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ள முக்கியமான கட்சியான தேசிய மக்கள் கட்சி ஏற்கனவே 40 தொகுதிகளுக்கான தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில் மீதம் இருக்கக்கூடிய கட்சியான நாகா மக்கள் முன்னணி இன்னும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை என்றும் எனினும் தங்கள் கட்சி சார்பில் 40 வேட்பாளர்கள் எது விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளதால் அந்தக் கட்சியும் கூட்டணிக்கு தற்போதைக்கு உள்ளே வருவதற்கான வாய்ப்பு குறைவாகத்தான் உள்ளது. எனவே இந்த முறை 60 தொகுதிகளிலும் தனியாக களம் இறங்கி தேர்தல் முடிவுகளைப் பொறுத்து கூட்டணிகளை அமைத்துக் கொள்ளலாம் என பாரதிய ஜனதா கட்சியின் தலைமை முடிவெடித்திருப்பதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.

மற்றொருபுறம் காங்கிரஸ் கட்சியும் கிட்டத்தட்ட தனித்து போட்டியிடுவது என்ற முடிவில் தான் இருப்பதாக தகவல்கள் சொல்லப்படுகின்றது. 3 முறை தொடர்ந்து ஆட்சி செய்த போதும் கடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருந்த நிலையில் தற்போது ஆளும் பாஜக அரசின் மீதான அதிருப்தியின் காரணமாக இந்த முறை நிச்சயமாக ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலத்துடன் வெற்றி கிடைக்கும் என காங்கிரஸ் கட்சி உறுதியாக நம்புகிறது. எனவே தற்போதைக்கு கூட்டணி குறித்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல் தேர்தல் வியூகங்களை அமைப்பதில் அக்கட்சி மும்முரமாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் மணிப்பூர் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை 9 சட்டமன்ற உறுப்பினர்கள் திரும்ப பெறுவதாக அறிவித்து அதன் பிறகு கூட்டணி கட்சிகளின் ஆதரவு, எம்எல்ஏக்களை சமாதானப்படுத்துவது போன்றவற்றை மேற்கொண்டு ஆட்சி தக்க வைக்கப்பட்டது ஆனால் தற்பொழுதும் அந்த பழைய பிரச்சனை புகைந்து கொண்டிருக்கும் இதுவும் தங்களுக்கு சாதகமானதாக இருக்கும் என காங்கிரஸ் கட்சி நம்புகிறது.

இரண்டு தேசிய கட்சிகள் ஒன்றுடன் ஒன்று நேரடியாக மோதுவதால் மணிப்பூர் தேர்தல் களம் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com