நல்ல வேலைக்கு "குட்-பை" கிராமம் கிராமமாக செல்லும் பேட்மேன்..!

நல்ல வேலைக்கு "குட்-பை" கிராமம் கிராமமாக செல்லும் பேட்மேன்..!
நல்ல வேலைக்கு "குட்-பை" கிராமம் கிராமமாக செல்லும் பேட்மேன்..!
Published on

கிராமப்புற பெண்கள் மத்தியில் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இளைஞர் ஒருவர் கிராமம் கிராமமாக சென்று வருகிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 32 வயது இளைஞர் மங்கேஷ் ஜா. கடந்த 2014-ம் ஆண்டு உயர்தர ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்தார். தொல்லையில்லாத வேலை. 1-ம் தேதியானால் சம்பளம் என எந்தவித பிரச்னையும் இல்லாமல்தான் வாழ்ந்து வந்தார். ஆனால் எவ்வளவு நாள் தான் இப்படி வேலைபார்ப்பது..? மக்களுக்கான நல்ல விஷயம் ஏதாவது செய்ய வேண்டும் என சிந்தித்தார் மங்கேஷ் ஜா. அதனால் தனது பணியை துறந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் மிகச் சாதாரணமாக கிராமங்களுக்கு சென்றார். சாலை வசதிகள் இல்லை. பேருந்து வசதி இல்லை. மருத்துவ வசதி இல்லை.. இப்படிப்பட்ட கிராமங்களுக்கு தொடர்ச்சியாக கஷ்டப்படாமல் இஷ்டப்பட்டு சென்றார் மங்கேஷ் ஜா. அவர் அதிகம் சென்றது பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குதான்.

பின்னர் கிராம பெண்கள் மத்தியில் மாதவிடாய் சுகாதாரம் பற்றி பேசும் அவர் பெண்களுக்கு தேவையான சானிட்டரி பேட்களை வழங்கி வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து இந்த பணியை செய்து வருவதால் ஏழை மக்களுக்காவே மங்கேஷ் ஜாவின் வாழ்க்கை மாறிவிட்டது. பொதுவாக கிராமப்புறங்களில் பெண்கள் வறுமையால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் மாதவிடாய் குறித்த பிரச்னைகளை வெளியில் பேசவும் தயங்குகின்றனர். அத்தகைய பெண்களிடமும் அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி சானிட்டரி பேட்களை வழங்கி வருகிறார். தொடக்கத்தில் மங்கேஷ் ஜாவை சந்தேக கண்ணுடன் பார்த்த கிராம பெண்கள் பின்னர் இவரின் தலைசிறந்த பணியின் அற்புதத்தை உணரத் தொடங்கிவிட்டனர். பிரபல நடிகரான அக்ஷ்ய் குமார் மங்கேஷ் ஜாவின் தனித்துவமான பணியை பாராட்டியுள்ளார்.

போட்டி நிறைந்த உலகில் அன்பு, சமூக சேவை என்பதெல்லாம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில் மங்கேஷ் ஜா போன்றோர் பாராட்டப்பட வேண்டிய பெருமைக்குரியவர்கள் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com