அன்று மங்களூரு...இன்று கேரளா.. சர்ச்சையாகும் டேபிள்டாப் ஓடுதளம்.. விபத்து நடந்தது எப்படி?

அன்று மங்களூரு...இன்று கேரளா.. சர்ச்சையாகும் டேபிள்டாப் ஓடுதளம்.. விபத்து நடந்தது எப்படி?
அன்று மங்களூரு...இன்று கேரளா.. சர்ச்சையாகும் டேபிள்டாப் ஓடுதளம்.. விபத்து நடந்தது எப்படி?
Published on

துபாயிலிருந்து கேரளா வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது. இதில் ஒரு குழந்தை, விமானிகள் இரண்டு நபர்கள் உட்பட 17 நபர்கள் உயிரிழந்தனர். மேலும் 123 பேர் காயமடைந்துள்ளதாகவும் 15 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியானது. முதற்கட்ட தகவல் அறிக்கையில் விமானத்தின் முன்சக்கரத்தில் பழுது ஏற்பட்டதால் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் நிபுணர்கள் விபத்து நடந்ததற்கு டேபிள்டாப் விமான தரைத்தளதமே முக்கிய காரணம் என்று குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த ஆண்டுகளில் இதேபோல துபாயிலிருந்து மங்களூருவுக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 737-800 என்ற விமானம் மங்களூரு விமான நிலையத்தில் விபத்துக்குள்ளனாது. இதற்கு காரணமாகவும் அங்கு அமைக்கப்பட்டிருந்த டேபிள் டாப் விமான  ஓடுதளமே முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.

அதனால் இந்தச் சமயத்தில் மங்களூருவில் நடந்த விபத்தானது எப்படி நடந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி ஆல் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737-800 ரக விமானம் 166 பயணிகளை ஏற்றிக் கொண்டு துபாயிலிருந்து வந்து கொண்டிருந்தது. விமானமானது 4 மைல் தொலைவில் இருக்கும்போது, விமான தளத்தில் விமானம் தரையிறங்குவதற்கான சமிக்கைகள் கொடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு அறையிலிருந்து விமானம் தரையிறங்குவதற்கான ஓடு தளம் சரியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அப்போது தூரல் மழை பெய்திருந்தாலும்  தரைத்தளம் ஈரமாக இல்லாததால் தரைத்தளமானது பார்ப்பதற்கும் நன்றாக இருந்தது. விமானமானது தரைத்தளத்திற்கு அருகில் வந்த போதுதான் பிரச்னைத் தொடங்கியது. வேகமாக வந்த விமானமானது தரைத்தளத்தில் மோதியது. உடனே விமானி விமானத்தை ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தி  நிறுத்த முயன்றார். ஆனால் விமானத்தின் டயரானது வெடிக்கத் தொடங்கியது. இதனையடுத்து விமானத்தின் ஒரு இறக்கை விமானத்தளத்தின்  இறுதிப் பகுதியில் மோதி உடைந்தது. இதனைத்தொடர்ந்து மலைக்குன்றுகளை நோக்கி வேகமாகச் சென்ற விமானம் பள்ளத்தாக்கில் விழுந்தது. இறுதியாக விமானம் தீ பிளம்புகளுடன் வெடித்தது. அதிலிருந்து 158 பயணிகள் தங்களது உயிரையை தீக்கு இரையாக்கினர். விமானத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள் கேபிள்களிலும், டார்மாக்கிலும் சிக்கியிருந்தனர். இந்த விமான தரைத்தளமும் டேபிள்டாப் விமானத்தளம் என்பது கவனிக்கத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com