MeToo புகார் விவகாரம் தொடர்பாக மூத்த நீதிபதி, சட்ட வல்லுநர் கொண்டு குழு அமைத்து விசாரிக்க பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இதற்காக சர்வதேச அளவில் தொடங்கப்பட்டது தான் #MeToo என்ற பிரச்சாரம். அதன் தாக்கம் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. பாலிவுட் நடிகைகள் பலர் முக்கிய பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். பாடகி சின்மயி புகாரை அடுத்து தமிழத்திலும் இந்த விவகாரம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், MeToo புகார் விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற மூத்த நீதிபதி, சட்ட வல்லுநர்கள் கொண்டு குழு அமைத்து விசாரிக்க பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில், “இந்த புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் 4 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும். ஒவ்வொருவரின் புகாருக்கு பின்னால் இருக்கும் வலிகளை என்னால் உணர முடிகிறது. அந்த கமிட்டி சட்டரீதியான ஆலோசனைகள் மற்றும் தீர்வுகளை முன் வைக்கும்” என்றார்.