ஆன்லைன் கல்வி: உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி வெளியிட்ட நெறிமுறைகள்.!

ஆன்லைன் கல்வி: உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி வெளியிட்ட நெறிமுறைகள்.!
ஆன்லைன் கல்வி: உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி வெளியிட்ட நெறிமுறைகள்.!
Published on

நாடு முழுவதும் இணையவழிக் கல்வியைப் பின்பற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு 'நாக்' அமைப்பின் அங்கீகாரம் கட்டாயம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வியைத் தொடர்ந்து இணையவழிக் கல்விமுறைக்கும் முக்கியத்துவம் வழங்கிவரும் யுஜிசி, இணையவழிக் கல்வியை மேற்கொள்ளும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இணையவழிக் கல்வியைத் தொடங்கவுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சிலில் (naac) மதிப்பீட்டில் 3.26 மதிப்பெண் அல்லது தேசிய கல்வி நிறுவனத் தரவரிசையில் 100 இடங்களுக்குள் கட்டாயம் இடம்பெற்றிருக்கவேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.

சுழற்சி அடிப்படையில் அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது குறைந்தது இரண்டு முறையாவது தரவரிசையில் இடம்பெற்றிருக்க வேண்டும். உயர்கல்வி நிறுவனங்கள் குறைந்தது 3 இளநிலைப் பாடப்பிரிவும், 10 முதுநிலைப் படிப்பும் தொடங்கவேண்டும். விதிமுறைகளைப் பன்பற்றுவது பற்றி பிரமாணப் பத்திரம் ஒன்றை உயர்கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழிக் கல்வியைத் தொடங்க விரும்பும் கல்வி நிறுவனங்கள் அக்டோபர் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com