ஒடிசாவில் அடுப்பில்லாமல் வெயிலிலேயே ஒருவர் ஆம்லேட் போட்டுள்ளார்.
இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களை வெயிலிருந்து பாதுகாத்து கொள்ள நண்பகல் நேரங்களில் வீட்டிலிருந்து வெளியில் வராமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தமிழகத்தை காட்டிலும் வட மாநிலங்களில் வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. ஒடிசா மாநிலத்தில் 45.4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. ஒடிசாவில் ஒருவர் அடுப்பை பற்றவைக்காமலே, சாலையில் கடாயை வைத்து அதில் முட்டை உடைத்து ஊற்றியிருக்கிறார். அடித்த வெயிலுக்கு, அந்த முட்டை ஆம்லேட்டாக வெந்து விட்டது. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.