மத்தியப்பிரதேசம்: ரீல்ஸ் எடுக்க அணையில் இருந்து குதித்த 20 வயது இளைஞர்; காணாமல் போன சோகம்!

ரீல்ஸ் எடுப்பதற்காக அணையில் குதித்த 20 வயது இளைஞர் இறுதியில் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசம்
மத்தியப்பிரதேசம்முகநூல்
Published on

மத்தியப்பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி ருதியாய் பகுதியில் உள்ள கோபிசாகர் அணையில் மாலை 5 மணி அளவில், ஒரு அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன்படி தீபேஷ் லோதா என்ற 20 வயது இளைஞர் கோபிசாகர் அணையில் தனது நண்பர் ராஜுடன் சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்காக ரீல்ஸ் எடுக்க சென்று காணாமல் போயுள்ளார்.

சம்பவத்தின்படி தீபேஷ் லோதா தனது நண்பர் ராஜிடம் ரீல்ஸ்க்கு வீடியோ எடுக்குமாறு கூறிவிட்டு, அணையில் இருந்து குதித்துள்ளார். தனக்கு நீச்சல் தெரியும் என்றும் கூறி குதித்துள்ளார். ஆனால் குதித்தவுடன் எதிர்பாராவிதமாக நீரில் மூழ்கிய திபேஷ் மூச்சுத்திணறவே, ’உதவி உதவி’ என்று கத்தியுள்ளார்.

இதனைக்கண்ட ராஜ் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் மாநில பேரிடர் அவசரகால மீட்புப்படைக்கு தகவல் (SDERF) கொடுத்துள்ளார். அதன்கீழ், சம்பவம் இடத்துக்கு வந்த மீட்புத்துறையினர் தீபேஷ் லோதாவை தேடியபோது கண்டுபிடிக்க முடியாமல் திணறியுள்ளனர். இதனையடுத்து, தேடும் பணியை மீட்புத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மத்தியப்பிரதேசம்
ஈரோடு: குழந்தை விற்பனை வழக்கு – தலைமறைவாக இருந்த நபர் கைது

மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்த பூல் சிங் பஞ்சாரா என்ற அப்பகுதி விவசாயி, தனது குழந்தை கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து பார்ப்பதற்குள் தீபேஷ் நீரில் மூழ்கியதாகவும், சில நொடிகளில் அவர் காணாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

ரீல்ஸ் மோகத்தால் ஏற்படும் இதுபோன்ற விபரீதங்கள் தொடர் கதையாகி வருவது வருத்தமளிக்கும் ஒன்றாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com