சொன்னபடி மகளுக்கு வரன் தேடித்தராத திருமண தகவல் மையம்: வழக்கு போட்டு நஷ்ட ஈடு வாங்கிய தந்தை

சொன்னபடி மகளுக்கு வரன் தேடித்தராத திருமண தகவல் மையம்: வழக்கு போட்டு நஷ்ட ஈடு வாங்கிய தந்தை

சொன்னபடி மகளுக்கு வரன் தேடித்தராத திருமண தகவல் மையம்: வழக்கு போட்டு நஷ்ட ஈடு வாங்கிய தந்தை
Published on

தனது மகளுக்கு சொன்ன நேரத்தில் மணமகனை பார்த்து கொடுக்க தவறிய திருமண தகவல் மையத்திடமிருந்து நஷ்ட ஈடு பெற்றுள்ளார் பெண்ணின் தந்தை.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பவன் குமார் ஷர்மா. பன்ச்குலாவை நகரைச் சேர்ந்த இவர் தனது மகளுக்கு வரன் தேட சொல்லி டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் திருமண தகவல் மையத்தை கடந்த 2017 இல் அணுகியுள்ளார். வரன் தேடுவதற்காக  80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணமாக செலுத்தி உள்ளார். இருப்பினும் சொன்ன நேரத்தில் வரன் பார்த்து கொடுக்க தவறியவிட்டதாக தெரிகிறது. இதனால் திருமண தகவல் மையத்திற்கு எதிராக 2018 இல் நுகர்வோர் நீதிமன்றத்தை அவர் அணுகியுள்ளார். 

நீதிமன்றம் விசாரித்து பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு 15000 ரூபாய் நஷ்ட ஈடு தொகையாகவும், 7000 ரூபாய் வழக்கு தொடர்ந்த செலவுக்காகவும் கொடுக்க வேண்டுமென அந்த திருமண தகவல் மையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அது போக அவர் செலுத்திய தொகையையும் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com