அமெரிக்கா | McDonald's Quarter Pounder சாப்பிட்டவர் மரணம்... 49 பேருக்கு E-Coli பாதிப்பு!

அமெரிக்காவில், மெக்டொனொல்ஸ் quarter pounder சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 10 மாநிலங்களில் 49 பேர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காமுகநூல்
Published on

அமெரிக்காவில், மெக்டொனொல்ஸ் quarter pounder sandwich சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 10 மாநிலங்களில் 49 பேர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்...

அமெரிக்கா கொலராடோவில் பிரபல உணவகமான mcdonalds-ல் quarter pounder சாப்பிட்ட முதியவர் ஒருவர், அதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இதேபோல quarter pounder சாப்பிட்ட குழந்தை ஒன்றும், கடுமையான சிறுநீரக பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து கொலராடோ, அயோவா, கன்சாஸ், மிசோரி, மொன்டானா, நெப்ராஸ்கா, ஓரிகான், உட்டா, விஸ்கான்சின் மற்றும் வயோமிங் உட்பட 10 மாநிலங்களில் குறைந்தது 49 பேர் quarter pounder சாப்பிட்டதில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக்கூறப்படுகிறது. பெரும்பாலான பாதிப்புகள் கொலராடோ மற்றும் நெப்ராஸ்காவில் பதிவாகியுள்ளது.

இதனடிப்படையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் மெக்டொனால்ஸில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போதுதான், நோய்வாய்ப்பட்ட பெரும்பாலான மக்கள் முன்பாக mcdonalds-ல் சாப்பிட்டதாகவும், குறிப்பாக mcdonalds quarter pounder சாப்பிட்டதாகவும் தெரியவந்தது என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) தெரிவித்துள்ளது. மேலும், உணவில் வைக்கப்பட்டிருந்த வெட்டப்பட்ட வெங்காயம் மற்றும் மாட்டிறைச்சிகளில் ஈ-கோலை பாக்டீரியாவால் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம் முதியவர் ஈ.கோலை பாக்கிடீரியா தொற்றால்தான் மரணமடைந்துள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா
Headlines | கனமழையால் இடிந்த பெங்களூரு கட்டடம் முதல் உகாண்டா பெட்ரோல் டேங்கர் லாரி விபத்து வரை!

இதைத்தொடர்ந்து கொலராடோ, கன்சாஸ், உட்டா, வயோமிங் மற்றும் இடாஹோ, அயோவா, மிசோரி, மொன்டானா, நெப்ராஸ்கா, நெவாடா, நியூ மெக்சிகோ மற்றும் ஓக்லஹோமா ஆகிய பகுதிகளில் உள்ள McDonalds கடைகளில் quarter pounder விநியோகம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.

E.coli தொற்று என்றால் என்ன?

E.coli தொற்று, Escherichia coli என்பதன் சுருக்கம். இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலில் பொதுவாகக் காணப்படும் ஒருவகை பாக்டீரியா ஆகும். பெரும்பாலான E-coli பாதிப்பில்லாதது. அவை ஆரோக்கியமானவையாகவும் குடல் பாதையை சீர் செய்து உணவை ஜீரணிக்க உதவுகின்றன என்றும் சொல்லப்படுகிறது. அதிலும் சில, கிருமிகளை எதிர்த்துப் போராடுகின்றன, வைட்டமின்கள் உற்பத்தி செய்கின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.

எனினும் சில வகையான ஈ கோலை குடலில் தொற்றுநோயை உண்டாக்கும், அது குடல் நோயை ஏற்படுத்தும்.

இதனால் வயிற்றுப்போக்கு, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், செப்சிஸ், நிமோனியா மற்றும் பிற நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம். தற்போது அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களில் பலர், ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு வந்துவிடுகின்றனர் என்றபோதிலும் உரிய மருத்துவ சிகிச்சை அவசியம் எனக்கூறப்பட்டுள்ளது. யாரொருவர் மருத்துவமனை சென்றாலும் தாங்கள் என்ன சாப்பிட்டோம் என மருத்துவர்களிடமும் தெரிவிக்க வேண்டுமென அமெரிக்காவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா
கணினி யுகம்... குழந்தைகள் , இளம்வயதினரை பாதிக்கும் TEXT NECK SYNDROME?

பாதிப்பு?

வேகவைக்கப்படாத மாட்டிறைச்சி, பச்சை பால், அன்பேஸ்சுரைஸ்டு (unpasteurized) ஜூஸ் மற்றும் அசுத்தமான தண்ணீர், பதப்படுத்தப்பட்ட வெங்காயம் ஆகியவற்றில் இவ்வகை ஆபத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருக்கும். அதை உண்பதால் ஒருவருக்கு இத்தொற்று ஏற்படலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com