அவுரங்கபாத்: போக்ஸோ சட்டத்தில் கைதான நபர் சிறையில், கழிப்பறை ஆசிட் குடித்து மரணம்

அவுரங்கபாத்: போக்ஸோ சட்டத்தில் கைதான நபர் சிறையில், கழிப்பறை ஆசிட் குடித்து மரணம்

அவுரங்கபாத்: போக்ஸோ சட்டத்தில் கைதான நபர் சிறையில், கழிப்பறை ஆசிட் குடித்து மரணம்
Published on

அவுரங்காபாத்தில் 15 வயது சிறுமியைக் கடத்தியதாக, போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்யப்பட்ட  நபர், காவலில் இருந்தபோது கழிப்பறை சுத்தம் செய்யும் அமிலத்தை உட்கொண்டு உயிரிழந்துள்ளார்

உயிரிழந்த நபர் கிராமப்புறங்களில் பஜனைகளை பாடுபவர், அவர்மீது 15 வயது சிறுமியை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் ஜனவரி 20-ஆம் தேதி, குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.

அப்போது அந்த நபர், போலீஸிடம் வாஷ்ரூமுக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டார். கடந்த வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில், காவலரும் மற்ற மூன்று அதிகாரிகளும் அந்த நபரை வாஷ்ரூமுக்கு அழைத்துச் சென்றனர். இந்த நேரத்தில், குற்றம்சாட்டப்பட்ட அந்த நபர், பாட்டிலில் இருந்த கழிப்பறை சுத்தம் செய்யும் அமிலத்தை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது, சில நிமிடங்கள் கழித்து, வாந்தியெடுத்துவிட்டு சம்பவ இடத்திலேயே சரிந்தார் அவர்.

உடனடியாக போலீசார் அந்த நபரை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அவரை அவுரங்கபாத் ஜி.எம்.சி.எச் மருத்துவமனைக்கு உயர்சி கிச்சைக்காக கொண்டுசென்றனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் அவர் உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பாக, காவல்துறை துணைப்பிரிவு அதிகாரி விஷால் நேஹுல் பாட்டீல் மருத்துவமனைக்குச் சென்று, காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்படும் என்று குடும்பத்தினருக்கு உறுதியளித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com