’தனித்துப் போட்டி’: மம்தா எடுத்த திடீர் முடிவு.. INDIA கூட்டணிக்கு பின்னடைவு?

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடவுள்ளோம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா
மம்தாபுதிய தலைமுறை
Published on

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடவுள்ளோம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.அப்படி மேற்கு வங்கத்தில் திரிணாமுல் தனித்து போட்டியிட்டால் இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும்சூழலில் தேர்தல் முன்னேற்பாடுகளை அனைத்து கட்சிகளும் துவங்கியுள்ளனர். மேலும் இதில் பாரதிய ஜனதா கட்சியை தேற்கடிப்பதற்கென்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த I.N.D.I.A கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அதிரடியாக தெரிவித்துள்ளார்.மேலும் இது குறித்து பேசிய அவர், ”காங்கிரஸ் கட்சியுடன் எந்தவித தொகுதி பங்கீடு குறித்தும் இன்றளவும் பேசப்படவில்லை. நாங்கள் தனியாகவே பாரத ஜனதா கட்சியை மேற்கு வங்கத்தில் தோற்கடிப்போம்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதன்மூலமாக மேற்கு வங்க மாநிலத்தினை பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ், இடது சாரிகள் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்புள்ளது. எனவே மும்முனை போட்டி நிகழும் சூழலில் இந்த முடிவு இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா கூட்டணியை பொறுத்தவரை பல்வேறு மாநிலங்களோடு தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைப்பெற்று கொண்டு வருகிறது.

மம்தா
ஏப்ரல் 16ல் மக்களவைத் தேர்தல்? - இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த அறிவுறுத்தல்கள் என்ன?

அதன்படி, பஞ்சாப், ஹரியான, டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிகளோடும், மேற்கு வங்கத்தில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவோடும்,சரத்பவாரின் தேசிய வாத காங்கிரஸ் ஆகியோருடனும் . தமிழ்நாட்டில் திமுகாவோடும் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் இந்தியா கூட்டணி அமையுமா? என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 2 மக்களவை தொகுதிகளை மட்டுமே தரமுடியும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூறியிருக்கும் நிலையில் கூடுதலான இடம் கேட்டு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது என்பது கூடுதலான செய்தி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com