மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்காக தனி ஹெலிகாப்டர் மூலம் நேற்றைய தினம் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பயணம் மேற்கொண்டார். அப்போது மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பலத்த சூறைக்காற்றில் மம்தா பானர்ஜி பயணித்த ஹெலிகாப்டர் சிக்கியது. இதனால் அவசர அவசரமாக செவோக் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறக்கபட்டது.
சூறைக்காற்றில் சிக்கியபோது, ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் குலுங்கியுள்ளது. அப்போது மம்தா பானர்ஜியின் கால் தசைநார் பாதிக்கப்பட்டது.
இதனால் தரையிரங்கியவுடன் உடனடியாக கொல்கத்தா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தசைநார் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளனர்.
ஆனால் மருத்துவர்கள் அறிவுரையை ஏற்க மறுத்த மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியின் உதவியுடன் தனது வீட்டிற்கு சென்று வீட்டிலேயே ஓய்வெடுப்பதாக கூறியுள்ளார். மேலும் மருத்துவமனையில் இருந்து அவர் புறப்பட்டு சென்றதாக கொல்கத்தா மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது