இந்நிலையில், சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “நந்திகிராம் தொகுதியில் பணப்பட்டுவாடா, லஞ்சம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டே சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி, நந்திகிராம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போதும் முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்’’ என மம்தா பானர்ஜி கோரியுள்ளார்.