மேற்குவங்கத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக இரண்டு நாள் சட்டமன்ற கூட்டம் திங்கட்கிழமை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மசோதா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என அவைத் தலைவர் பிமன் பானர்ஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படவில்லை என்பதால் அவையை கூட்ட ஆளுநரின் அனுமதி தேவையில்லை என சட்டப்பேரவை விவகாரங்கள் துறை அமைச்சர் சோவண்தேப் தெரிவித்தார். நீதி விரைவில் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் மாநிலச் சட்டம் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியதும் ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்படும் எனக் கூறிய அமைச்சர், ஆளுநர் அனுமதி வழங்காவிட்டால் என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டியிருப்பதாக தெரிவித்தார். பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க வழிவகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.
சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் அளுநர் மாளிகையின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார்.