சத்தியாகிரக போராட்டம் நடத்தும் மம்தா 2013-இல் என்ன செய்தார் ?

சத்தியாகிரக போராட்டம் நடத்தும் மம்தா 2013-இல் என்ன செய்தார் ?
சத்தியாகிரக போராட்டம் நடத்தும் மம்தா 2013-இல் என்ன செய்தார் ?
Published on

பிரதமர் மோடி அரசின் மிக மோசமான பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைக்காக தான், சத்தியாகிரக போராட்டம் நடத்துவதாக கூறும் மம்தா பானர்ஜி, கடந்த 2013-ஆம் ஆண்டு கொல்கத்தா போலீஸ் ஆணையரை ஒரே நாள் இரவில் நீக்கிய சம்பவமும் அரங்கேறியது.

கொல்கத்தாவில் உள்ள ஹரி மோகன் கோஸ் கல்லூரியில் கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கல்லூரி அமைந்திருந்த இடம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்பட்டதால் தேர்தல் பரபரப்பாக பேசப்பட்டது.

அன்றைய தினம் காலை 11.45 மணியளவில் திரிணாமூல் காங்கிரஸ் யூனியன் மாணவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் யூனியன் மாணவர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சவுத்ரி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து கொல்கத்தா போலீஸ் தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு 12 பேரை கைது செய்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். அத்துடன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலரான இக்பால் என்பவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவருக்கு நெருங்கிய தொடர்புடையவர் என கூறப்பட்டது.

இதனிடையே இவ்விவகாரத்தில் இக்பாலுக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறுமாறு அப்போது போலீஸ் கமிஷ்னராக இருந்த ரஞ்சித் பச்னந்தாவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு அவர் இணங்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து பச்னந்தாவை முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒரே நாள் இரவில் போலீஸ் கமிஷ்னர் பதவியில் இருந்து நீக்கி, இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். போலீஸ் கமிஷ்னர் ஏன் அப்பதவியில் இருந்து விலக்கப்பட்டார் என்று அப்போதும் கேள்விகள் எழுந்தன.

தற்போது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக தான் கொல்கத்தா போலீஸ் ஆணையரை சிபிஐ குறிவைப்பதாக கூறும் மம்தா பானர்ஜி, அன்று மட்டும் ஏன் ஆளுங்கட்சி தொடர்புடைய நபர் மீது நடவடிக்கை எடுத்த போலீஸ் ஆணையரை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக பதவி விலக்கியது ஏன் என்ற சர்ச்சைகளும் தற்போது எழுந்துள்ளன.

Courtesy: TheQuint

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com