“வணிக வளாகங்கள் வாகன கட்டணம் வசூலிக்கக் கூடாது” - குஜராத் நீதிமன்றம்

“வணிக வளாகங்கள் வாகன கட்டணம் வசூலிக்கக் கூடாது” - குஜராத் நீதிமன்றம்
“வணிக வளாகங்கள் வாகன கட்டணம் வசூலிக்கக் கூடாது” - குஜராத் நீதிமன்றம்
Published on

பெரு வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம், வாகனத்தை நிறுத்துவதற்கான கட்டணம் வசூலிக்கக் கூடாது என குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் வாகனக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என போக்குவரத்து காவல்துறையினர் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து வணிக நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த, குஜராத் உயர்நீதிமன்ற தனிநீதிபதி, போக்குவரத்து காவலர்களின் உத்தரவுக்கு தடைவிதித்ததோடு, குறைந்த அளவில் வாகன கட்டணம் வசூலிக்குமாறு உத்தரவிட்டார்.

இதுதொடர்பான மேல்முறையீட்டு மனு, குஜராத் உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ஆனந்த் தேவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குஜராத் மாநில ஒருங்கிணைந்த பொது வளர்ச்சி விதிமுறைகளின் கீழ், வணிக நிறுவனங்கள், தங்களின் வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com