இத்தனை வசதிகளா?: அசத்தல் ஆட்டோவைப் பார்த்து வாய்பிளந்த தொழிலதிபர்கள்!!

இத்தனை வசதிகளா?: அசத்தல் ஆட்டோவைப் பார்த்து வாய்பிளந்த தொழிலதிபர்கள்!!
இத்தனை வசதிகளா?: அசத்தல் ஆட்டோவைப் பார்த்து வாய்பிளந்த தொழிலதிபர்கள்!!
Published on

மும்பை ஆட்டோ ஒன்றில் அமைக்கப்பட்ட வசதிகளை பார்த்து தொழிலதிபர்களே வியந்து பாராட்டியுள்ளனர்

இந்திய அளவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சாமானிய மக்களை தாண்டி
மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி
வருகிறது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளி என
கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கைகளை மக்களிடத்தில் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மும்பையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவை பல்வேறு வசதிகளுடன் மாற்றி அமைத்துள்ளார். இந்த ஆட்டோவை இணையத்தில் பார்த்த தொழிலதிபர்கள் ஆனந்த் மகேந்திரா மற்றும் ஹர்ஸ் மரிவாலா ஆகியோர் ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும் அந்த ஆட்டோ ஓட்டுநருக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்துள்ள ஆனந்த் மகேந்திரா, ''கொரோனா சோதனையிலும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இது தூய்மை இந்தியாவை துரிதப்படுத்துகிறது'' என தெரிவித்துள்ளார். தொழிலதிபர்களையே வியக்க வைத்த அந்த ஆட்டோவில், குப்பைகளை பிரித்து போடுவதற்கான இடம் உள்ளது. கைகளை கழுவ வாஷ்பேஷின் வைக்கப்படுள்ளது. அந்த நீர் வீணாகாமலிருக்க அருகே சில செடிகளும் வைக்கப்பட்டுள்ளன.

கைகழுவும் நீர் அந்த செடிகளுக்கு போகிறது. குடிநீர் இருக்கிறது. செல்போன் சார்ஜர், வைஃபை, கூலர் பேன், செல்போனுடன் இணைக்கும் வசதி கொண்ட டிவி போன்ற வசதிகள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் ஆட்டோவில் கொரோனா தொடர்பான உதவி எண்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நன்றி வாசகங்கள் போன்றவைகளும் எழுதப்பட்டுள்ளன. இந்த அசத்தல் ஆட்டோவுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com