மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
Published on

மகாராஷ்டிரா, ஹரியானாவில் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டப்பேரவை இடங்களில், 235 பெண்கள் உள்பட மூவாயிரத்து 237 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் ஆளும் பாஜக சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது. அதேநேரத்தில் ஆட்சியை  கைப்பற்றும் நோக்கில், காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளது. இவர்கள் தவிர மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, 101 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்டவையும் களத்தில் உள்ளன.

இதேபோல, 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்திலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும் இங்கு தீவிரம் காட்டி வருகின்றன

இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தவிர, மகாராஷ்டிரா மற்றும் பீகாரில் தலா ஒரு மக்களவைத் தொகுதியிலும், 17 மாநிலங்களில் உள்ள 51 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வருகிற 24 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com