70 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரத்தை கண்ட இந்திய கிராமம்

70 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரத்தை கண்ட இந்திய கிராமம்
70 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரத்தை கண்ட இந்திய கிராமம்
Published on

சுதந்திரம் பெற்று கடந்த 70 ஆண்டுகளுக்கு பிறகு 200 பேர் வசிக்கும் குக்கிராமத்திற்கு மின்சாரம், பஸ் வசதி கிடைத்துள்ளதால் அக்கிராமமே மகிழ்ச்சியில் உள்ளது.

மகாராஷ்டிராவிலுள்ள காட்சிரோலி மாவட்ட எல்லை பகுதியில் உள்ளது அம்தேலி குக்கிராமம். இந்த கிராமம் மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா மாநில எல்லையில் அமைந்துள்ளதால் இங்குள்ளவர்கள் தெலுங்கு மொழி பேசுகின்றனர். மலைப் பகுதியாக உள்ளதால் தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியல்வாதிகள் இங்கு வந்து செல்வது வழக்கம். பிறகு மறந்தும் இந்தப் பக்கம் அவர்கள் வருவதே இல்லை. நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகியும் மின்சாரம், போக்குவரத்து என அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத கிராமமாக இது இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், இந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ராஜே அம்ப்ரிஷ்ராவ் தனது மாவட்ட வளர்ச்சி நிதியிலிருந்து 45 லட்சம் ரூபாயை அம்தேலிக்கு ஒதுக்கி தந்தார். இதனையொட்டி மின்சார வாரியம் அக்கிராமத்திலுள்ள வீடுகளுக்கு புதியதாக மின்சாரம் வழங்கியுள்ளது. மேலும், அருகிலுள்ள நகரத்திலிருந்து கிராமத்திற்கு தேவையான போக்குவரத்து வசதியையும் செய்து கொடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com